100 நாட்களில் 1 இலட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டிற்குமுன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் நேற்றைய “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்” மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் (1,02,514 கோடி ரூபாய்) ஈர்க்கப்பட்டுள
தமிழகத்தில் பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சில பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு 60 சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் நில வழிகாட்டி மதிப்புகள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் தற்போ
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடையாறு ஆற்றில் காணாமல் போன ஆர்பிஐ (RBI) ஊழியரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரிமுனை அருகே உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் எஸ். மோகன்குமார். 30 வயதான இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் வர்த்தகத்தில் அவர் சுமார் ரூ. 60 லட்சம் முதலீடு செய்திருந்தார். இதில் ரூ. 30 லட்சம் வங்கிக் கடன் மூலமாகவும், மீதமுள்ள ரூ. 30 லட்சம் நண்பர்களிட
தொழில் திட்டங்களுக்கான அனுமதியை விரைவுபடுத்தும் வகையில், தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற இனி வேளாண்மைத் துறையின் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றும் விதிகளில் திருத்தம் செய்து, ஜூலை 31-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, தொ
டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள வி. செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதேசமயம், விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தா
காவிரி நீர் ஒழுங்குமுறை குழு பரிந்துரைத்தபடி, தமிழ்நாட்டுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது தண்ணீர் திறக்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின்
அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை, படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 23ம் ஆண்டுகளுக்கு முன், மதுபானக் கடைகள் தனியாருக்கு ஏலம் மற்றும் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், பல இடங்களில் சில பெரிய வியாபாரிகள் கூட்டுச் சேர்ந்து (Cartel) ஏலத்தை கட்டுப்படுத்தியதாக அரசு கூறியது. இதனால் போட்டி குறைந்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய
புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம் சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் (Fort St. George) இயங்கி வரும் தமிழக தலைமைச் செயலகத்தை, நகரின் மையப் பகுதியைத் தாண்டி புதிய இடத்துக்கு மாற்ற தமிழக அரசு ஆலோசித்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், முதலமைச்சர் ச
பள்ளிக்கரணை ராம்சார் தள எல்லைக்குள் உள்ள வீடுகள் மற்றும் மனைகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற தகவல்கள் சமூக வலைதளங்களிலும், உள்ளூர் அளவிலும் பரவி வரும் நிலையில், அவை அனைத்தும் வதந்தி என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம், 2022-ஆம் ஆண்டு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக (Ramsar Site) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ராம்சார் தளத்தின்