சென்னை: பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ள நிலையில், 108 இடங்களை கைப்பற்றிஉள்ள தவெக, ஆட்சி அமைப்பதற்காக, கவர்னரை சந்தித்து உரிமை கோரினார். ஆனால், ஆளுநர் பெரும்பான்மைக்கான விவரங்களை பட்டியலிட்ட பிற
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பதவி ஏற்பார் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். .தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில், திமுக, அதிமுக இணைந்து ஆட்ச
சென்னை: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது. அதனால் 108 இடங்களை பிடித்த தவெக ஆட்சி அமைக்க முன்வந்துள்ளது. அந்த கட்சிக்கு திமுக கூட்டணியில் இருந்து வந்த
சென்னை: தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 108 இடங்களை பெற்ற தவெக ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இருந்தாலும் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கவர்
சென்னை, மே 11: தமிழ்நாடு சட்டமன்றம் திங்கள்கிழமை காலை கூடிய நிலையில், 17-ஆவது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. மு.வி. கருப்பையா, உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முன்னதாக, மு.வி. கருப்பையா ஞாயிற்றுக்கிழமை இடைக்கால சட்டப்பேரவைத் தல
கரூர் நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சந்திப்பதற்கும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதற்கும் தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க ஒப்புக்கொண்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்துள்ள மனு
Party Fund இல் சிறந்தவர் C.விஜயபாஸ்கர் என்ற தலைப்பில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், C.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். இதுதொடர்பாக CBI அவர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப
முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் அரசின் முக்கிய ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில், எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பும் இல்லாத இரு தனியார் நபர்கள் தொடர்ந்து பங்கேற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை திமுக முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி)யிடம் அவசர புகார் மனு அளித்துள்ளார்.
கடந்த 126 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜூன் மாதத்தில் நாடு மூன்றாவது மிக மோசமான மழைப்பொழிவைக் காண வாய்ப்புள்ளது. திங்கட்கிழமை வரை, நாடு வெறும் 92.1 மி.மீ பருவமழையை மட்டுமே பெற்றுள்ளது, இது 42% பற்றாக்குறையாகும். 1901-ஆம் ஆண்டு முதல், ஜூன் மாத மழைப்பொழிவு 100 மி.மீ-க்கும் குறைவாகப் பதிவானது நான்கு முறை மட்டுமே. இதில் மிக மோசமான ஆண்டு 2009 ஆகும், அப்போது நாடு வெறும் 87.5 மி.மீ மழையை மட்டுமே பெ