பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) காலமானார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையில் இருக்கும் என்ரிகா நிறுவனத்தின் 11 விதமான மதுபானங்களை விற்கக்கூடாது என்று கடந்த ஆகஸ்ட் 13 அன்று சுற்றறிக்கை அனுப்பிய டாஸ்மாக் நிர்வாகம், ஒரே நாளில் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதற்கு என்ன காரணம்? செயற்கை சுவையூட்டிகளால் மது குடிப்பவர்களுக்கு என்ன பாதிப்பு?
2020 ஆம் ஆண்டில் வெறும் 2.25 லட்சம் ரூபாயுடன் தொடங்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியில், 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 8,452 கோடி ரூபாய் குவிந்திருந்தது. பிஎம் கேர்ஸ் நிதியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த வரவு-செலவு விவரம் எழுப்பும் கேள்விகள் என்ன?
‘மெக்கா ஒப்பந்தம்’ மூலம் உலகின் மூன்று முக்கிய முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையே கூட்டு பாதுகாப்பு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
நல்கொண்டா மாவட்டம், கொண்டமல்லேபள்ளியைச் சேர்ந்த பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி கொலை வழக்கில், இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ளதாக நல்கொண்டா போலீசார் அறிவித்துள்ளனர். செல்போனில் பள்ளி முதல்வர் பேசிய ஒரு வார்த்தையால் இந்த வழக்கில் துப்பு துலங்கியது எப்படி?
நீரிலிருந்து வெளியே வந்தால் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி பெரும்பாலான நேரத்தைக் குளங்களிலேயே கழித்து வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு, அனந்த் அம்பானியின் உதவியுடன் மும்பை ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.