ரஷ்யப் போரில் உக்ரைனை ஆபத்தில் தள்ளியதா Starlink? உக்ரைனின் குற்றச்சாட்டும் SpaceX நடவடிக்கையும்!
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவைகளின் வேகத்தைக் குறைத்து உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது உக்ரைன் அரசு.
உக்ரைனுக்கு என்ன பாதிப்பு?
இதுவரை வெளியாகி உள்ள தகவலின்படி,உக்ரைன் முனையங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இணையம்தான் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இந்த இணையச் சேவையின் வேகம் 60-70 கி.மீ ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதை உக்ரைன் அரசே உறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்த வேகக் குறைப்பு உக்ரைனின் ‘காமிகாஸே’ வகை ட்ரோன்களான FP-2, டார்ட்ஸ், ஹார்னெட், ரேம்-2 ஆகியவற்றின் செயல்பாடுகளைப் பாதித்துள்ளது.
மேலே சொல்லியுள்ள காமிகாஸே வகை ட்ரோன்கள் நடுத்தர இலக்குகளைப் பாதிக்கும் ட்ரோன்கள் ஆகும்.
இந்த ட்ரோன்களை வைத்துத்தான் உக்ரைன் கிரீமியா மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள், தளவாடக் கடத்தல் வழித்தடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வந்திருக்கிறது.
தற்காப்புமே...
இன்னொரு பக்கம், இந்த இணையத்தின் மூலம்தான் ரஷ்யாவின் ‘ஷாஹேத்’ வகை ஜெட் ட்ரோன்களை உக்ரைனின் Drone interceptors தடுத்து வந்துள்ளது.
ஸ்டார்லிங்கின் இந்த ஒற்றைச் செயல் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் செய்யும் தாக்குதல் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் தற்காப்புத் திறன் இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.
நன்றி எலான் மஸ்க்! - உக்ரைன்
உக்ரைனின் இந்தக் குற்றச்சாட்டிற்குப் பிறகு, ஸ்டார்லிங்கின் இணைய சேவை மீண்டும் ஒரு மணிநேரத்திற்கு 160 கிலோ மீட்டர் வேகம் என்று மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்து உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ், “மணிக்கு 160 கி.மீ வேகத்திலான ஸ்டார்லிங்க் இணைய இணைப்பு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் தற்காப்பிற்கு ஸ்டார்ஷீல்டின் வேக லிமிட்டை முழுமையாக நீக்குவது இப்போது மிக அத்தியாவசியமான ஒன்றாகும்.
நன்றி எலான் மஸ்க்” என்று கூறியிருந்தார்.
இந்தப் பதிவில் ஸ்டார்லிங்க் மற்றும் ஸ்டார்ஷீல்ட் இரண்டும் குழப்பப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினுடையது. ஆனால், ஸ்டார்ஷீல்டோ அமெரிக்காவின் அரசாங்கத்தினுடையது.
எலான் மஸ்க் என்ன சொல்கிறார்?
இதை விளக்கி எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், “ஸ்டார்ஷீல்ட் அமைப்புகள் அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமானவை மற்றும் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்குபவை.
அதன் வேகம் அல்லது பயன்பாட்டிற்கான எந்தவொரு எல்லைகளையும் அமெரிக்க இராணுவமும், இறுதியாக அமெரிக்க அதிபரும் மட்டுமே தீர்மானிக்கிறார்கள்.
ஆனால், ஸ்டார்லிங்க் என்பது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு வணிக ரீதியான சேவையாகும்.
ஸ்டார்லிங்கின் பயன்பாடு சிவில் அல்லது தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே உட்பட்டது.
அதைத் தாக்குதல் சார்ந்த இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் வணிக ரீதியிலான ஒரு நிறுவனத்திற்கு அது சரியாக இருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
ஆக, இந்தப் பதிவில் எலான் மஸ்க் ஸ்டார்லிங்கின் இணைய சேவை முழுக்க முழுக்க சிவில் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கானது. இதை ராணுவ நடவடிக்கைக்குப் பயன்படுத்துவது சரியாகாது என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.
உக்ரைனுக்கு உதவுவது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முடிவு
உக்ரைனின் இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவர் விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் ஆய்வாளர் தனது விளக்கத்தில்,
"ஸ்பேஸ் எக்ஸ் என்பது உக்ரைனுக்கு உதவ வேண்டும் என்ற எந்தக் கடமையும் இல்லாத ஒரு தனியார் நிறுவனம். இருப்பினும் அரசாங்கங்கள் தயங்கி நின்றபோது அது தானாக முன்வந்து உதவியது.

ஸ்டார்லிங்க் மற்றும் ஸ்டார்ஷீல்ட் ஆகிய இரண்டும் ஒன்றல்ல. ஸ்டார்ஷீல்ட் அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்றிரவு அந்த முடிவை எடுத்தது அவர்கள்தான்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வருவாயில் உக்ரைனின் பங்கு மிக மிகச் சிறிய அளவே. ஆனால் ரஷ்யத் தாக்குதல்கள் மற்றும் சர்வதேச அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் இயங்குவதற்கான அபாயங்களை நிறுவனமே சுமக்கிறது.
இதிலிருந்து கிடைக்கும் நிதிப் பலன், அவர்கள் சந்திக்கும் ஆபத்துகளுக்கு ஈடாகாது. ஸ்பேஸ் எக்ஸ் விரும்பித் தேர்வு செய்ததாலேயே உதவுகிறது. அதேவேளையில், ஸ்டார்ஷீல்ட் அமைப்பைப் பயன்படுத்துவது அமெரிக்க அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது.
தனது தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான எல்லைகளை நிர்ணயிக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு. ஏனெனில் அதற்கான உரிமையாளர்களும், அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திப்பவர்களும் அவர்கள்தான்.
அதேசமயம், உக்ரைனை வீழ்த்த அச்சுறுத்தும் வகையில் ரஷ்யா ஸ்டார்லிங்கைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தீவிரமாக ஒத்துழைத்து வருகிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
உண்மை என்னவென்றால், ஆரம்ப நாட்களில் உக்ரைனின் தகவல் தொடர்பைக் காப்பாற்றிய ஸ்டார்லிங்க் இல்லையென்றால், அவர்களின் இன்றைய நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். இதற்கு அவர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எது எப்படியோ, இதுவரை உக்ரைனுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உதவி வந்துள்ளது. ஆனால், திடீரென்று ஏதோ ஒரு காரணத்திற்காகப் பின்வாங்கியுள்ளது.
அதுதான் என்னவென்று இப்போதைக்குத் தெரியவில்லை!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


.jpeg?resize=390%2C205)