மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு திரும்பிய நடராஜன்.. ஆனால் பாதி விலைக்கு தான்...

 

ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்களின் டிரேடிங் முறையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் தனது பழைய அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாதுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

 

கடந்த 2020 முதல் 2024 வரை சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன், கடந்த சீசனில் தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ. 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். எனினும், கடந்த சீசனில் போதிய வாய்ப்புகள் மற்றும் எதிர்பார்த்த பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தத் தவறிய அவர், தற்போது ரூ. 5 கோடிக்கு மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குத் திரும்பியுள்ளார். 
 

இந்த டிரேடிங் முறையில் சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் ஸீசன் அன்சாரி தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 73 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள நடராஜன், சன்ரைசர்ஸ் அணிக்காக மட்டும் 55 போட்டிகளில் விளையாடி 65 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் முக்கியப் பந்துவீச்சாளராகத் திகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.