கும்பகோணம் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து 1957இல் திருடப்பட்டதாகக் கூறப்படும் திருமங்கை ஆழ்வார் சிலை, 69 ஆண்டுகள் கழித்து மீட்கப்பட்டு மீண்டும் அந்தக் கோயிலுக்கே கொண்டு வரப்பட்டது எப்படி?
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் உண்மையான நிலைபாடு என்ன? என திமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதன் பின்னணி என்ன?
பெல்ஜியத்தின் இளவரசர் லாரன்ட், 26 வயதான முன்னாள் கார் விற்பனையாளரான கிளெமென் வாண்டென்கெர்கோவை தனது மகனாகவும் வாரிசாகவும் சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 65 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது 13 வயது பேத்தி உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடித்து ஐ போன், இருசக்கர வாகனங்கள் வாங்க அவர்கள் திட்டமிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும் என, மனிதள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் அறிவித்துள்ளார். அமைச்சரின் அறிவிப்பு, தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான முன்னெடுப்பாக பல தரப்புகளிலும் பார்க்கப்படுகிறது.
போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க சுற்றறிக்கை அனுப்பிய குஜிலியம்பாறை வட்டாட்சியர், கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அதிரடியாக மாற்றப்பட்டார்.