கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி ஜந்தர்மந்தர் போராட்டத்தின் போது பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதற்காக பல மணி நேரம் தர்ணா போராட்டம் செய்த ராகுல் காந்தி என்ன சொன்னார்?
விசாகப்பட்டினத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆறு வயது சிறுவன், வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆசிரியர் அடித்தது காரணமா? உண்மையில் நடந்தது என்ன?
பெல்லட் குண்டு தாக்குதலில் காயமடைந்ததாக சாஹில் லோச்சாவ் மற்றும் அவரது தாயார் உடன் காவலநிலையம் சென்ற ராகுல் காந்தி நேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் எனக்கோரி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
சௌகார் ஜானகியின் 70 ஆண்டுகளுக்கும் மேலான திரைப் பயணம் தனித்துவமானது. கதாநாயகியாக மட்டுமின்றி பல வகை கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவரது திரை வாழ்வில் முத்திரை பதித்த பத்து படங்கள் யாவை?
நான்கு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் மதபோதகருக்கு நான்கு மரண தண்டனைகளை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. மதபோதகர் சிக்கியது எப்படி?
போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் பற்றி தகவல் கொடுத்ததால்தான் அமுதன் கொலை செய்யப்பட்டாரா? பெற்றோர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் காவல்துறையினர் கூறுவது என்ன?