உலகக் கோப்பையை ஏந்திய முதல் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் யார்? ஒரு வினாடி-வினாவில் இந்தப் கேள்வி இடம் பெற்றால், 1958 ஸ்வீடன் உலகக் கோப்பையில் பிரேசில் அணியின் கேப்டனாக இருந்த ஹைரால்டோ பெல்லினியின் பெயரை நீங்கள் பதிலாகக் கூற வாய்ப்புள்ளது. ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தின் நுழைவாயிலில் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.