துபையில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபை பயணிகள் விமானம் புதன்கிழமை காலை செளதி அரேபியாவுக்குத் திருப்பிவிடப்பட்டு, அங்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது
2028 சிம்ஹஸ்த் கும்பமேளாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகளின் போது, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உஜ்ஜைன் ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றியதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் சட்ட ஆவணங்கள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.
ஏமனின் மோதல் பகுதிக்கு அரிதாகக் கிடைக்கும் அணுகல் வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசாங்க ஆதரவுப் படைகளின் வீரர்களுடன் பிபிசி (BBC) போர்க்களத்தின் முன்னணிக் கோட்டிற்குச் செல்கிறது.
அமெரிக்காவில் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, 41 ஆண்டுகள் மரண தண்டனை கைதியாக இருந்த நபர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிதாக ஆய்வு செய்யப்பட்ட டிஎன்ஏ ஆதாரங்கள் அவருக்கும் அந்தக் குற்றத்துக்கும் தொடர்பு இருப்பதை நிரூபிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மான்செஸ்டர் ஸ்கூல் ஆஃப் பிசியோதெரபியில் இணைப் பேராசிரியராக இருக்கும் மெக்கார்த்தி, சரியான தலையணை என்பது நீங்கள் எந்த நிலையில் தூங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும் என்கிறார்.
சிங்கப்பூரில் பிரபலமான நீர்த்தேக்கத்தில் உவர்நீர் முதலை இருப்பது போன்ற ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட படத்தைப் பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
யசுவோ தகமாட்சுவின் மனைவி யூகோ, 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, யசுவோ கடலில் மூழ்கிக் கற்றுக்கொண்டார். அதன்பிறகு, யூகோவை நினைவுகூரவும், அவருடனான அன்பையும் தொடர்பையும் தொடர்ந்து பேணவும், மாதத்திற்கு இரண்டு முறை கடலுக்குள் சென்று வருகிறார்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் கவின் செல்வ கணேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீதான குற்றப் பத்திரிகையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.