ஏஐ அமைப்புகள் அதிக சக்திவாய்ந்தவையாக மாறும்போது, அவற்றின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாட்டை மனிதர்களால் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பதே உண்மையான கேள்வியாக இருக்கலாம்.
ஏனெனில், உண்மையான ஆபத்து இயந்திரங்கள் சக்திவாய்ந்தவையாக மாறுவதில் இல்லை. அவற்றுக்கு வேண்டாம் (No) என்று சொல்லும் வாய்ப்பையே மனிதர்கள் இழக்கும் அளவுக்கு பலவீனமாகிவிடுவதில் இருக்கலாம்.
"மைக்ரோபிராக்டிஸ்" (Micropractice) என்ற நூலின் ஆசிரியர் எலி சஸ்மன் கூறுகையில், சில பயிற்சிகளை வெறும் 30 விநாடிகளில் செய்துவிட முடியும். இவைதான் "மைக்ரோ பயிற்சிகள்" (micropractices). இவற்றில் சிலவற்றை நீங்கள் இப்போதே முயற்சித்துப் பார்க்கலாம்.
1970-இல் வெளியாக ஹம்பேக் திமிங்கலத்தின் பாடல் ஆல்பமில் இடம்பெற்றபோது திமிங்கலப் பாடல் என ஒன்று இருப்பதையே அதற்கு முன்னர் அறியாத உலகத்திற்கு அதனை அறிமுகப்படுத்தியது.
தனது சகோதரி இளவரசி டயானா உயிரிழந்த சில நாள்களுக்குப் பிறகு, மன்னர் சார்லஸுடன் நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து தான் கூறுவது உண்மைதான் என்று டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
2032 ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் ஃபிட்ஸ்ராய் ஆற்றில் 500 முதலைகள் வாழ்ந்தபோதிலும், ஆற்றின் இயற்கையான நீரோட்டங்களும் வளைவுகளும் போட்டிகளுக்குச் சமமான வாய்ப்பை அளிக்குமா என்பதே விளையாட்டு அமைப்புகளின் முதன்மைக் கவலையாக உள்ளது.
தொலைதூர ரஷ்ய நகரம் ஒன்றில், சோவியத் கைதிகளால் கட்டப்பட்ட செயற்கை கடற்கரையில் குலாக் முகாமில் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் தொடர்ந்து கரை ஒதுங்கி வருகின்றன.
பராமரிப்பின்றி கிடக்கும் இந்த மனித எச்சங்கள், வரலாற்றை மறக்கும் ஒரு பரந்த போக்கைச் சுட்டிக்காட்டுகின்றன.
தலைமை ஆசிரியரின் பாலியல் அத்துமீறலுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டிப் போராடிய முன்னாள் மாணவர்கள் இருவர், இறுதியில் தங்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர்.
கோவை சாரமேடு பகுதியில் இஸ்லாமிய பெண்களுக்காக பிரத்யேகமாக இயக்கப்படும் உடற்பயிற்சிக் கூடத்தில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள், தினமும் பயிற்சி பெறுகின்றனர். இந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு நேரில் சென்ற பிபிசி தமிழ், அங்கிருந்த பெண்களிடம் கலந்துரையாடியது.
டெல்லி அருகே 6 மாத குழந்தையை பிட்புல் ரக நாய் தாக்கியது இந்தியாவில் நாய்க்கடி பிரச்னை குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. குறிப்பாக, பிட்புல், ராட்வெய்லர் போன்ற ஆக்ரோஷமான நாய்கள் வளர்ப்பு பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது.