பிகார் மாநிலம் ஜமுயி பகுதியில் மைனர் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், 2005-க்கு முந்தைய ஆர்ஜேடி ஆட்சிக்கால லால் ராஜ்ஜியத்தில் பெண்கள் பாதுகாப்பின்றி இருந்ததை நினைவுகூருமாறு ஜேடியு பதிலடி கொடுத்துள்ளது.
சமீபத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் புலி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். இந்தப் புலி 28 நாட்கள் கழித்து பிடிக்கப்பட்டது. புலிகளைத் தேடும் பணியில் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டன.
சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம், இந்தியாவின் நிலப் பரப்பு உரிமைகோரல்களுக்குச் சவால் விடுப்பதோடு, சர்ச்சைக்குரிய காஷ்மீர் மீதான மூலோபாயக் கவலைகளையும் ஆழப்படுத்துகிறது.
சமூக ஊடகங்கள் இளம் வயதினரிடையே, "குறைபாடற்ற சருமம்" மற்றும் "கிளாஸ் ஸ்கின்" போன்ற சருமப் பராமரிப்பு போக்குகளை ஊக்குவித்து வருகின்றன. பல இளைஞர்கள், தோல் நிபுணர்களின் ஆலோசனையை விடவும், "Get Ready With Me" (GRWM) போன்ற வீடியோக்களில் வரும் இன்ஃப்ளூயன்சர்களின் ஆலோசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
மற்ற தெய்வங்கள் அவரை மலர்களாலும், அழகிய கிரீடங்களாலும், கழுத்தணிகளாலும், வளையல்களாலும் அலங்கரித்தனர். அவரைப் பார்ப்பவர், மனிதராக இருந்தாலும், அழியாத தெய்வமாக இருந்தாலும், மூச்சுவிட மறந்துவிடும் அளவுக்கு அவர் அழகாக இருந்தார்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது பதக்க நாளில் இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்கு பதக்கங்களைக் குவித்துள்ளது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் (10m Air Rifle) தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கங்களுடன், குழுப் பிரிவில் வெள்ளியும் கிடைத்துள்ளது. மேலும், கலப்பு தற்காப்புக் கலையான எம்.எம்.ஏ-வில் (MMA) சூச்சிகா தரியல் வெண்கலம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் à®
டெல்லியில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்த பணியின்போது, தேர்தல் அதிகாரிகளால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட வாக்காளர்களின் பட்டியலில் பல பிரமுகர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுவது என்ன?
தமிழ்நாட்டில் கிரானைட் தொழிலதிபரான ஆர்.வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொது தளத்தில் இந்த வழக்கு கவனம் பெற்றுள்ள நிலையில், மாநில அரசியலிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.