இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஜூன் 2026-ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.9% அதிகரித்து, ரூ.1.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கியமாக இறக்குமதிகள் மீதான வரி வசூல் அதிகரித்ததே காரணம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது