ஒருநாள் பேட்டர் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் #Mandhana

புதுடெல்லி:

மகளிர் அணியின் பேட்டர் தரவரிசையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒருநாள் பேட்டர் தரவரிசையில் மீண்டும் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டைப் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் 790 ரேட்டிங் புள்ளிகளுடன் தற்போது உலகின் சிறந்த பேட்டராகத் திகழ்கிறார்.

கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா ஜூன், செப்டம்பர் மாதங்களிலும் முதலிடத்தைப் பிடித்திருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தில் இருக்கும் மந்தனா, சர்வதேச டி20 தரவரிசையிலும் 1 இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.