காக்ரோச் ஜனதா கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் அசாம் காவல்துறையினரின் காவலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.
ஷானன் சீனியர் 14 ஆண்டுகளாக செவிலியராகப் பணியாற்றி வந்தார். ஆனால், 2023-ஆம் ஆண்டு தனது முதல் குழந்தைக்காக கர்ப்பமானபோது, தனக்கு என்ன நடக்கிறது என்பதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது இந்திய அணி.
இது முற்றிலும் நவீன காலத்தின் நிகழ்வு போல் தோன்றலாம். ஆனால், இந்தச் சிறிய அலங்கரிக்கப்பட்ட "a" எழுத்தின் சுழல்களுக்குள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு கதை மறைந்திருக்கிறது. நாடுகள், பண்பாடுகள், மொழிகள் எனப் பல்வேறு எல்லைகளைக் கடந்து, மனித வரலாற்றின் பக்கங்களில் இந்தக் குறியீடு பயணித்துள்ளது.
சௌதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பல்ஜிந்தர் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது குடும்பத்தினர் இந்திய மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளிடம் உதவி கோரி வருகின்றனர்.
கென்யாவின் மவுண்ட் எல்கான் பகுதியில் வாழும் ஆப்பிரிக்க யானைகள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள 35-க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களைப் பயன்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.