E - Gaming: `இ - கேமிங் துறைக்கு கட்டுப்பாடு தேவையில்லை... டாப் கேமர்களுடன் பேசிய நரேந்திர மோடி!

`கேமிங் துறைக்கு எந்த கட்டுப்பாடும் தேவையில்லை, அது சுதந்திரமாக இருக்க வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களை சந்தித்து பேசினார். இ-கேமிங் துறையிலுள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை தீர்த் மேத்தா, அனிமேஷ் அகர்வால், அன்ஷு பிஷ்ட், நமன் மாத்தூர், மிதிலேஷ் படன்கர், கணேஷ் கங்காதர் மற்றும் பாயல் தாரே ஆகிய கேமர்கள் மோடியுடன் பேசினர். 

Mobile Gaming

இ - கேமிங்கிற்கு கட்டுப்பாடு தேவையில்லை…

அப்போது, கேமர் அனிமேஷ் அகர்வால், இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங்கை ஒரு முக்கிய விளையாட்டாக அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்றார். அதோடு இது ஒரு திறமை அடிப்படையிலான கேம் மற்றும் இது சூதாட்டத்தில் ஈடுபடாது. நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோர் உள்பட அனைத்து அரசாங்க அமைப்புகளாலும் இது புரிந்து கொள்ளப்பட்டால், உண்மையில் பலனளிக்கும் என்று பிரதமரிடம் கூறினார்.

இதற்குப் பதிலளித்த மோடி, "இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங்கிற்கு எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. அது சுதந்திரமாக இருக்க வேண்டும், அப்போதுதான் அது செழிக்கும். சூதாட்டத்தை எதிர்ப்பதற்கு ஒரு வித்தியாசம் தேவைப்பட்டாலும், இ-ஸ்போர்ட்ஸ் போன்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு விரும்பவில்லை" என்று பதிலளித்தார். 

ஆன்லைன் சூதாட்டம்

கேமிங் துறையில் அரசின் கட்டுப்பாடு அவசியமா?!...

கேமிங் துறையில் ஏதேனும் கட்டுப்பாடுகள் தேவையா என்று நமன் மாத்தூர் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மோடி, ``கட்டுப்பாடு என்பது சரியான வார்த்தையாக இருக்காது; ஏனெனில் தலையிடுவது அரசாங்கத்தின் இயல்பு. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. நீங்கள் ஒரு சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சிக்கிறீர்கள் அல்லது நம்முடைய நாட்டின் தேவைகளின் அடிப்படையில் அதைப் புரிந்துகொள்கிறீர்கள் மற்றும் அதை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து அதன் நற்பெயரை உயர்த்துங்கள் என்று கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.