கண்டேன் காதல் பட ஷூட்டிங்கின் போது கோ படத்தை மிஸ் பண்ணிட்டேன்! - நடிகர் பரத்

அவள் விகடன் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகர் பரத்.

நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, ``டிசம்பர் 14, 2004. இந்தத் தேதியை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. `காதல்’ படம் அந்த தினத்தில்தான் வெளியானது. என்னை ஹீரோவாக மக்களிடம் கொண்டு சேர்த்தது அந்தப் படம்தான். இன்றைக்கும் ஒவ்வோர் ஆண்டும் அந்த நாளை நினைவுகூர்ந்துகொள்வேன்.

என்னுடைய கரியரில் கோ படத்தை மிஸ் செய்ததுதான் பெரிய வருத்தம்.

பரத்

அந்தப் படம் எனக்குப் பெரிய திருப்பமாக இருந்திருக்கும். கண்டேன் காதலை ஷூட்டிங்கில் இருந்தபோது கே.வி.ஆனந்த் சாரின் போனை எடுக்க முடியவில்லை. அதனால் அந்தப் படத்தைத் தவறவிட்டேன்.

இப்போதுள்ள படங்களில் டான்ஸே இருப்பதில்லை. கடைசியாக டான்ஸ் ஆடியது விஜய் சார்தான் என நினைக்கிறேன். இப்போதுள்ள இயக்குநர்கள் `கதை... கதை...’ எனப் போய்விடுகிறார்கள்.

`மண்டாடி’, `மொத ராத்திரி’ மாதிரியான வெரைட்டியான படங்களும் அடுத்தடுத்து வெளியாகிவருகின்றன.’’ என்றார்.

Vikatan - Aval Awards Sponsors
Vikatan - Aval Awards Sponsors

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.