Maharaja: அந்தப் பெண்ணின் நடிப்பிலிருந்து மீள முடியவில்லை - சாச்சனாவைப் பாராட்டிய ஹாலிவுட் நடிகர்
ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ், ‘மகாராஜா’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதில் நடித்த இளம் நடிகை சாச்சனாவைப் பாராட்டியிருக்கிறார்.
குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் நித்திலன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சாச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மகாராஜா.
இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தியாவில் மட்டுமின்றி சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இந்தப் படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் வாரிய உறுப்பினரான கவிதா குப்தா The Hollywood Reporter India ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் ‘மகாராஜா’ படத்தைப் பற்றியும், குறிப்பாக சாச்சனாவின் நடிப்பைப் பற்றியும் நெகிழ்ந்து பேசியதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய கவிதா குப்தா, "சமீபத்தில் நடந்த பட விழாவில் டாம் ஹேங்க்ஸ், யாரும் கேட்காமலேயே ‘மகாராஜா’ படத்தைப் பற்றியும், குறிப்பாக சாச்சனாவின் நடிப்பைப் பற்றியும் நெகிழ்ந்து பேசினார். அந்தப் பெண்ணின் (சாச்சனா) நடிப்பிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை... என்னவொரு அற்புதமான நடிகை. என்னால் அப்படிச் செய்திருக்க முடியாது, அந்த ஆளைக் கொன்றிருப்பேன் என்று அவர் வியந்து கூறினார்" என்று பகிர்ந்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


