மீண்டும் ஐபிஎல் தொடருக்கு வரும் பென் ஸ்டோக்ஸ்... சிஎஸ்கே மீண்டும் ஏலம் எடுக்குமா?

 

 

இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், 2027 ஐபிஎல் ஏலத்திற்காக தன்னை பதிவு செய்துள்ளார். 

 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இனி தொடர்ந்து ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாட திட்டமிட்டுள்ள அவர், அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடி பிரிவில் இடம்பிடித்துள்ளார்.

 

கடந்த இரண்டு சீசன்களில் பங்கேற்காத ஸ்டோக்ஸ், ஐபிஎல் ஏல விதிமுறைகளின் காரணமாக 2027 ஏலத்தில் மீண்டும் இணைகிறார். டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில், பேட்டிங் மற்றும் நான்கு ஓவர்கள் பந்துவீசும் திறன் கொண்ட ஆல்-ரவுண்டர் என்ற வகையில் அவருக்குப் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2017-ல் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் 2023-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.

 

ரூ.47.45 கோடி கையிருப்பு வைத்திருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ரூ.35.15 கோடி வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆல்-ரவுண்டரைத் தேடும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க தீவிர ஆர்வம் காட்டும் முக்கிய அணிகளாகப் பார்க்கப்படுகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.