Ramayana Part 1: ஆஸ்கர் விருது போட்டியில் நுழைந்த ராமாயணா... எந்த பிரிவில் தெரியுமா?!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரவி துபே உள்ளிட்டோர் நடித்துள்ள ராமாயணா: பார்ட் 1 திரைப்படம் கடந்த நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. உலகளவில் ரூ. 1,700 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப் படைத்திருக்கும் இந்தப் படம், ஆஸ்கர் ரேஸிலும் நுழைந்திருக்கிறது.

99-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 14-ம் தேதி ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கான சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்யும் நிகழ்வு தொடங்கி நடந்துவருகிறது. அதன் அடிப்படையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects) பிரிவில் சிறந்த 20 திரைப்படங்களை ஆஸ்கர் விருது தேர்வுக் குழு பட்டியலிட்டிருக்கிறது.

ஆஸ்கர் விருது

அதில், டெனிஸ் வில்லெனுவேவின் டூன்: பார்ட் த்ரீ, கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி, பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லரின் புராஜெக்ட் ஹெய்ல் மேரி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டிஸ்க்ளோசர் டே, ஆண்டனி மற்றும் ஜோ ரூசோ இயக்கிய மார்வெல் ஸ்டுடியோஸின் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே உள்ளிட்ட படங்களுடன் நிதேஷ் திவாரியின் ராமாயணாவும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உறுதி செய்யப்பட்ட தகவலின்படி டிஸ்னி நிறுவனத்தின், அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே, ஜான் ஃபேவ்ரோவின் ஸ்டார் வார்ஸ்: தி மாண்டலோரியன் அண்ட் குரோகு, வேல்ஃபால், மோனா ஆகிய நான்கு படங்களும் முன்னணியில் உள்ளன. ஆஸ்கர் குறும்பட்டியலுக்கான வாக்கெடுப்பு டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி டிசம்பர் 11-ம் தேதி நிறைவடைகிறது. பல்வேறு பிரிவுகளுக்கான குறும்பட்டியல்கள் டிசம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இறுதிப் பரிந்துரைகள் ஜனவரி 21-ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.