ரூ.5,000 வரை உடனடி அபராதம் விதிக்கப்படும்.. சபரிமலை பக்தர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை...

 

 

 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் புனித நதியான பம்பை ஆற்றில் ஆடைகளை வீசினால் ரூ.5,000 வரை உடனடி அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

மகரவிளக்கு திருவிழா காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பம்பையில் நீராடிய பிறகு, தங்கள் பழைய மற்றும் ஈரமான ஆடைகளை ஆற்றில் விட்டு செல்வதால் நாள்தோறும் பல டன் கழிவுகள் சேர்ந்து நதி மாசடைந்து வருகிறது.

 

இதை தடுக்கும் வகையில், பிஎன்எஸ்எஸ் 2023 பிரிவு 163 மற்றும் கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994-ன் கீழ் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் ஆடைகள், பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை வீசுவோருக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். 15 நாட்களுக்குள் அபராதம் செலுத்த தவறினால், பிஎன்எஸ் பிரிவு 279 மற்றும் நீர் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

பம்பை நதியின் புனிதத்தையும் தூய்மையையும் பாதுகாக்க ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீச வேண்டாம் எனக் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசு வெளியிட்டுள்ள இந்த விதிகளைப் பக்தர்கள் முறையாகப் பின்பற்றுவது அவசியமாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.