அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்வு! - முதல்வர் விஜய், திரை பிரபலங்கள் பங்கேற்பு!

அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறன் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

View this post on Instagram

A post shared by Cinema Vikatan (@cinemavikatan)

அதனைத் தொடர்ந்து இன்று அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு சென்னையிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முக்கியமான அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், அதிமுக பொதுச்செயலாளர், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீஷன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

Chief Minister - Vijay

ச. ஜோசப் விஜய், மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கலாநிதி மாறன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், காவ்யா மாறன் சன்ரைசர்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பதனால், அந்த அணியின் தற்போதைய வீரர்களும், முன்னாள் வீரர்களும் பங்கேற்று வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.