Aakasamlo Oka Tara: ஆரம்பத்தில் நாயகியை மையமாகக் கொண்ட படமாகத் தோன்றியது; ஆனால்..- துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் ஆகாசம்லோ ஒக தாரா.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (நவ.18) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய துல்கர் சல்மான், "சென்னை எனக்குப் பிடித்தமான இடங்களில் ஒன்று. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் வெளியானபோது இங்குள்ள பத்திரிகையாளர்கள் அளித்த ஆதரவை என்னால் மறக்கவே முடியாது.
அந்தப் படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளம் கிடையாது. ஒரு சிறிய காதல் கதையாகவே விளம்பரப்படுத்தினோம். ஆனால், பத்திரிகையாளர் காட்சியைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதிய விமர்சனங்களும் செய்திகளும்தான் அந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
‘சீதா ராமம்’ படத்திற்குப் பிறகு இந்தக் கதையைக் கேட்டேன். ஆரம்பத்தில் இது கதாநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படமாகத் தோன்றியது. ஆனால் கதை மிகவும் பிடித்திருந்ததால் இந்தப் படம் வேறு யாரிடமும் சென்றுவிடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. இறுதியில் எனக்கிருந்த மற்ற படங்களின் பொறுப்புகளுக்கு மத்தியிலும் இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்தேன். இது ஒரு குறிப்பிட்ட மொழிக்கான கதை கிடையாது.
படத்தின் டீசர் வெளியானபோது கிடைத்த வரவேற்பு எங்களையே ஆச்சரியப்படுத்தியது. நாங்கள் எதிர்பார்த்ததைவிடப் பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைந்தது. சினிமாவின் அழகே அதுதான். எந்தப் படம் ரசிகர்களின் மனதைத் தொடும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது.
நாம் நம்பும் கதையை நேர்மையாகவும் அன்புடனும் உருவாக்கினால் அது நிச்சயம் மக்களிடம் சென்றுவிடும். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் எனக்கு ஒரு தம்பியைப் போன்றவர். அவருக்கு இசையின் மீதுள்ள காதலும், அர்ப்பணிப்பும் ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுகிறது" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

