சில அத்தியாயங்கள் முடிவுக்கு வருவது நல்லது.. தோனி ஓய்வு குறித்து மனைவி சாக்சி..

 

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து தனது வீரர் வாழ்க்கைக்கு அதிகாரப்பூர்வமாக விடைபெற்றுள்ளார். 

 

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, சிஎஸ்கே அணியின் புதிய ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த 19 ஆண்டுகளாக வீரராக தொடர்ந்த அவரது பொன்னான கிரிக்கெட் பயணம் தற்போது புதிய வடிவத்தை எடுத்துள்ளது. 

 

2008-ல் தொடங்கிய இந்த அற்புதமான பயணத்தில், தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 என ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி அசுர பலத்துடன் வலம் வந்தது.

 

தோனியின் இந்த ஓய்வு அறிவிப்புக்கு பிறகு, அவரது மனைவி சாக்ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி குறிப்பை பகிர்ந்துள்ளார். அதில், "சில அத்தியாயங்கள் முடிவுக்கு வந்தால்தான் புதிய மற்றும் அழகான அத்தியாயங்கள் தொடங்க முடியும். பல ஆண்டுகளாக மாஹிக்கு அன்பு செலுத்தி, ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். எப்போதும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் மாஹி" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இந்த உணர்ச்சிகரமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீரராக ஓய்வு பெற்றாலும், மென்டராக களமிறங்கும் தோனியின் புதிய பயணம் சிஎஸ்கே அணிக்கு மேலும் பல வெற்றிகளைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.