15 வயதில் கேப்டனாகி சாதனை.. புதிய உலக சாதனையை படைத்த வைபவ் சூர்யவன்ஷி...
இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயது கேப்டன் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். 2026-27 சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பீகார் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலம் அவர் இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.
15 வயது மற்றும் 232 நாட்களில் கேப்டன் பொறுப்பை ஏற்ற வைபவ் சூர்யவன்ஷி, இதற்கு முன்பு 17 வயது மற்றும் 311 நாட்களில் குரோஷியா தேசிய அணியின் கேப்டனாக இருந்த சாக் வுகுசிக்கின் சாதனையை முறியடித்துள்ளார். கேப்டனாக களமிறங்கிய தனது முதல் போட்டியில் 12 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்திய டி20 அணியில் அறிமுகமான வைபவ், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும் முக்கியப் பங்காற்றினார்.
இதுவரை 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 23 போட்டிகளிலும், கடந்த ஆண்டு இந்தியா ஏ அணிக்காக 42 பந்துகளில் 144 ரன்கள் குவித்தும் அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


