மீண்டும் அணி மாறிய ஹர்திக் பாண்டியா.. ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்த நடிகையின் அணி...
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அதிரடியான வீரர் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மூன்று சீசன்களாக மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, இனி பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அதேசமயம், 2018 முதல் பஞ்சாப் அணியின் தூணாக விளங்கி வந்த முன்னணி இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெகா வர்த்தக ஒப்பந்தத்தின்படி, ஹர்திக் பாண்டியா ரூ. 18 கோடிக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது அவரது முந்தைய தொகையான ரூ. 16.35 கோடியை காட்டிலும் சற்று கூடுதலாகும். மறுபுறம், அர்ஷ்தீப் சிங் தனது முந்தைய தொகையான ரூ. 18 கோடியே மும்பை அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
2015-இல் மும்பை அணியில் இணைந்து பல வெற்றிகளுக்கு வித்திட்ட ஹர்திக், குஜராத் அணியை வழிநடத்தி கோப்பையை வென்றதுடன், மீண்டும் மும்பை திரும்பி கேப்டனாக செயல்பட்டார். எனினும், கடந்த சில சீசன்களாக மும்பை அணியின் செயல்பாடு எதிர்பார்த்தபடி அமையவில்லை. மறுபுறம், பஞ்சாப் அணிக்காக 96 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள அர்ஷ்தீப், இனி ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து மும்பை அணியின் பந்துவீச்சுக் பலத்தை பலப்படுத்துவார். இந்த அதிரடி வீரர் மாற்றம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


