ஒரே இன்னிங்ஸில் 5 பேர் அரைசதம்.. பேட்டிங்கில் அசத்திய பாகிஸ்தான்.. பதிலடி கொடுக்குமா இலங்கை?

 

 

 

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பேட்டர்கள் அபாரமாக விளையாடி ரன்களைக் குவித்தனர். அதிகபட்சமாக சௌத் ஷகீல் 93 ரன்கள் எடுத்து சதத்தை  தவறவிட்டார். இவருடன் இணைந்து தயாப் ஆரிஃப் (57), முகமது தாஹா (51), பாபர் அசாம் (50) மற்றும் அராஃபத் மின்ஹாஸ் (52) என மொத்தம் ஐந்து வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். காஜி கோரி 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். முடிவில், பாகிஸ்தான் அணி 106.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

 

இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷன்கா மற்றும் அசிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. ஆட்டத்தின் இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.