லியோனல் மெஸ்ஸி வரலாற்றில் வரலாற்று சாதனை: தொடர்ச்சியாக கோல்டன் பூட் வென்று வரலாற்று சாதனை..

 

 

கால்பந்து உலகின் புகழ்பெற்ற நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, மேஜர் லீக் சாக்கர் தொடரின் வரலாற்றில் தொடர்ச்சியாக இரு சீசன்களில் கோல்டன் பூட் விருதை வென்ற முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளார்.

 

இண்டர் மயாமி அணிக்காக விளையாடும் 39 வயதான மெஸ்ஸி, 2026 வழக்கமான சீசனில்  26 கோல்கள் அடித்து இந்த விருதை தட்டிச் சென்றுள்ளார். சார்லோட் எஃப்.சி அணிக்கு எதிரான கடைசிப் போட்டி 3-3 என டிராவில் முடிந்தபோதிலும், மெஸ்ஸியின் கோல் எண்ணிக்கையை பிற வீரர்களால் முறியடிக்க முடியவில்லை. எஃப்.சி டல்லாஸ் அணியின் பீட்டர் மூசா 22 கோல்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

 

கடந்த சீசனில் 29 கோல்கள் அடித்திருந்த மெஸ்ஸி, இந்த சீசனில் 26 கோல்கள் மற்றும் 17 அசிஸ்ட்களை பதிவு செய்து இண்டர் மயாமி அணியின் வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.

 

அடுத்ததாக நடைபெறவுள்ள பிளே-ஆஃப் சுற்றில் இண்டர் மயாமி அணி கொலம்பஸ் க்ரூ அணியை எதிர்கொள்ளவுள்ளது. மேலும், தொடர்ந்து 3-வது முறையாக எம்.எல்.எஸ் தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் விருதை வெல்லும் பந்தயத்திலும் மெஸ்ஸி முன்னணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.