ஆசிய கோப்பை U19: பாகிஸ்தான் வெற்றி; ஹம்சா ஜஹூர் அதிரடி சதத்தால் அசத்தல்!

 

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அண்டர்-19 ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ போட்டியில், இந்திய அண்டர்-19 அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அண்டர்-19 அணி அபார வெற்றி பெற்றது.

 

அல் அமிரத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்ட இந்திய அணி, 46.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அதிரடியாக ஆடிய அர்ஜுன் ராஜ்புத் 78 பந்துகளில் 107 ரன்கள் (11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் அலி ரசா மற்றும் நிகாப் ஷஃபீக் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. எனினும், பொறுப்புடன் ஆடிய விக்கெட் கீப்பர் ஹம்சா ஜஹூர் 108 பந்துகளில் 100* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

 

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 209/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடி சதமடித்த ஹம்சா ஜஹூர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.