இன்று தீபாவளி தினத்தில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.. சேவாக், டிராவிட மகன்கள் பங்கேற்பு...

 

 

ஆசியக் கோப்பை U-19 தொடரின் ‘குரூப் ஏ’ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் விறுவிறுப்பான போட்டி இன்று தீபாவளி தினத்தில் ஓமனில் உள்ள அல் அமரத் மைதானத்தில் நடைபெறுகிறது.

 

முன்னாள் இந்திய வீரா்கள் வீரேந்தர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வய் டிராவிட் ஆகிய இருவரின் மீதும் ரசிகர்களின் பார்வை அதிகளவில் பதிந்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் நேபாள அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் ஆர்யவீர் சேவாக் ஆட்டமிழக்காமல் 70 ரன்களும், கேப்டன் லக்ஷ்யா 53 ரன்களும் குவித்தனர்.

 

அதேபோல், பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை  9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரு அணிகளும் தங்களது முதல் போட்டிகளில் பெரிய வெற்றிகளை பெற்றுள்ளதால், இப்போட்டியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இப்போட்டி இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு தொடங்கும். போட்டியை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்   தொலைக்காட்சியிலும், சோனிலிவ்  செயலியிலும் நேரலையாகக் காணலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.