``சாலமன் பாப்பையா இல்லாத தீபாவளியோ, பொங்கலோ ஞாபகத்தில் இல்லை - நடிகர் தனுஷ் உருக்கம்

பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா(90) கடந்த மாதம் 11-ம் தேதி இயற்கையெய்தினார். மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்த பாப்பையா படிக்கும் காலத்திலேயே மேடைகளில் மாணவராகப் பேசத் தொடங்கினார். படிப்பு முடித்து அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் துவக்கிய இவரிடம் படித்த பலர் பின்னாளில் சினிமா, எழுத்து எனப் பல தளங்களில் ஆளுமைகளாக வலம் வருகின்றனர்.

குறிப்பாக விழாக்காலங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றம் மூலம் பட்டிதொட்டியெங்கும் தமிழையும், தமிழர் பாரம்பர்யத்தையும் கொண்டுச் சேர்த்தார்.

சாலமன் பாப்பையா

90s கிட்ஸ் நினைவுகளில், விழாக்காலம் என்றால் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் முக்கிய அங்கம் வகிக்கும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் சிறப்பு பட்டிமன்றம் சாலமன் பாப்பையா இல்லாமலே கடந்திருக்கிறது.

இது குறித்து நடிகர் தனுஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழே வணங்கும் பேராசிரியர். சாலமன் பாப்பையா அவர்கள் இல்லாத தீபாவளியோ, பொங்கலோ எனக்கு சிறுவயது முதல் ஞாபகத்தில் இல்லை. இருப்பினும், திரு. ராஜா அவர்கள் அந்த இடத்திற்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். பாப்பையா ஐயா, உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் எங்கள் மனதில் வாழும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.