இன்று தீபாவளி திருநாள்.. லட்சுமி பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்...

 

ஒளியின் திருவிழாவான தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐப்பசி மாத அமாவாசை திதியில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, அறியாமை என்னும் இருளை நீக்கி அறிவு மற்றும் மகிழ்ச்சி என்னும் ஒளியை பரப்பும் குறியீடாக அமைகிறது.

 

இந்த ஆண்டு ஐப்பசி அமாவாசை திதி நவம்பர் 8 ஆம் தேதி காலை 11:28 மணிக்கு தொடங்கி நவம்பர் 9 ஆம் தேதி மதியம் 12:32 மணி வரை நீடிக்கிறது. இருப்பினும், மாலையில் வரக்கூடிய பிரதோஷ காலம் லட்சுமி வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது என்பதால், தீபாவளி பண்டிகை இன்று  கொண்டாடப்படுகிறது.

 

தீபாவளி நன்னாளில் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியையும், தடைகளை நீக்கும் விநாயக பெருமானையும் மக்கள் வீடுகளில் பூஜித்து வழிபடுகின்றனர். 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு பிறகு இராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய ஸ்ரீ ராமரை வரவேற்பதற்காக மக்கள் ஊரெங்கும் தீபங்களை ஏற்றி அமைத்த வரலாறே தீபாவளி கொண்டாட்டத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

 

லட்சுமி பூஜைக்கான முக்கிய நேரங்கள்:

 

லட்சுமி பூஜை முகூர்த்தம்: மாலை 5:54 முதல் இரவு 7:50 வரை

 

பிரதோஷ காலம்: மாலை 5:41 முதல் இரவு 8:17 வரை

 

நிசித காலம்: இரவு 11:44 முதல் நள்ளிரவு 12:36 வரை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.