ராமாயணா: `சாய் பல்லவியின் சண்டை காட்சி - முன்னாள் சீதை நடிகை தீபிகா சிக்லியா சொல்வது என்ன?

1987-ம் ஆண்டு வெளியான ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் மூத்த நடிகை தீபிகா சிக்லியா. ராமானந்த் சாகர் இந்தியில் இயக்கிய இத்தொடர் இன்றளவும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு நினைவுகூரப்படுகிறது. எனவே, சமீபத்தில் வெளியான நிதேஷ் திவாரியின் ராமாயணா திரைப்படத்துடன் இந்த பழைய தொடரை ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

குறிப்பாக

இத்திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி குறித்து பார்வையாளர்களிடம் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர் அதைப் பாராட்டி வரும் வேளையில், சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

தீபிகா சிக்லியா

இது தொடர்பாக தனியார் ஊடகத்துக்கு பிரத்யேகப் பேட்டியளித்த நடிகை தீபிகா சிக்லியா, ``அந்த சண்டைக் காட்சியை பார்த்தேன். எனக்கு உண்மையில் அது பற்றித் தெரியவில்லை. எங்கள் தொடரின் முக்கிய பகுதியாக இருந்த வால்மீகி ராமாயணம் மற்றும் துளசிதாசர் ராமாயண நினைவுகளில், இதுபோன்ற காட்சிகள் எங்குமே இருந்ததாக எனக்கு நினைவில்லை.

ஆனால், நம் நாட்டில் 300-க்கும் மேற்பட்ட ராமாயணப் பதிப்புகள் உள்ளன. ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு ராமாயணமும் மற்றொன்றிலிருந்து சற்று மாறுபட்டது. எனவே, எனக்குத் தெரியாத ஏதேனும் ஒரு ராமாயணப் பதிப்பிலிருந்து தயாரிப்பாளர்கள் இந்த அம்சத்தை எடுத்திருக்கலாம்." என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.