நூறு கோடி வானவில்: இந்தப் படம் இவ்வளவு நாள் வெளியாகாமல் இருந்தது வருத்தம் - ஹரிஷ் கல்யாண்

இயக்குநர் சசி எழுதி இயக்​கி​யிருக்கும் படம் ‘நூறு கோடி வானவில். இந்தப் படத்​தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்​னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், மூர்த்தி உட்​பட பலர் நடித்​துள்ளனர்.

இதன் படப்​பி​டிப்பு முடிந்து நீண்ட நாட்களாகியும் ரிலீஸ் ஆகாமல் இருந்​தது. இந்​நிலை​யில் இப்​படம் நவ. 6-ல், ஜீ5 ஓடிடி தளத்​தில் நேரடி​யாக வெளியாகிறது. இந்நிலையில், ‘நூறு கோடி வானவில்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்.3) நடைபெற்றது.

நூறு கோடி வானவில்

இதில் கலந்துகொண்டு பேசிய ஹரிஷ் கல்யாண், "பாடல், காட்சி, டயலாக் என ஒவ்வொன்றுக்கும் அவ்வளவு உழைப்பு போட்டிருக்கிறோம். ஒரு படைப்பு என்பது பலரின் உழைப்பு.

இந்தப் படம் இவ்வளவு நாள் வெளியாகாமல் இருந்தது வருத்தம்தான். சசி சார் சிறந்த சிந்தனையாளர், சிறந்த டெக்னிஷியன் மட்டும் அல்ல. அவர் ரொம்ப டிசிப்ளின் ஆன மனிதர்.

சரியான நேரத்திற்கு எல்லோரும் படப்பிடிப்புத் தளத்திற்கு வரவேண்டும். நேரத்தை யாரும் வீணடிக்கக்கூடாது, பணத்தைத் தேவை இல்லாமல் செலவு செய்யக்கூடாது என நினைப்பார். பட்டப்பிடிப்பிற்கான திட்டத்தைச் சரியாக செய்வார்.

நூறு கோடி வானவில்
நூறு கோடி வானவில்

அவரிடம் இருந்த அந்த டிசிப்ளினை நாங்களும் கற்றுக்கொண்டோம். இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான லவ் ஸ்டோரியாக இருக்கும். நிறைய எமோஷனலான விஷயங்கள் இருக்கிறது. எமோஷனைக் கையாளுவதில் அவர்தான் ஸ்பெஷலிஸ்ட்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.