Abishan Jeevinth: செல்லமே மகளே; பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை பகிர்ந்த அபிஷன் ஜீவிந்த்!
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.
சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்த அந்தப் படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருந்தது. இந்தப் படத்திலேயே ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், அடுத்ததாகக் கதாநாயகனாகக் களமிறங்கினார்.
அவர் ஹீரோவாக நடித்திருந்த வித் லவ் திரைப்படம் இந்தாண்டு வெளியாகி நல்லதொரு வரவேற்பையும் பெற்றிருந்தது.
அனஸ்வரா ராஜா கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருந்தார். தற்போது அபிஷன், சிவராஜ்குமாருடன் பிக்காஸோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அபிஷன் ஜீவிந்துக்கும் இவருடைய நீண்ட நாள் காதலியான அகிலா என்பவருக்கும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றிருந்தது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் புரோமோஷன் நிகழ்வில், அபிஷன், அகிலாவுக்கு ப்ரொபோஸ் செய்திருந்த வீடியோ வைரலானது பலருக்கும் நினைவிருக்கலாம்.
View this post on Instagram
இந்தத் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இத்தகவலை அபிஷன் ஜீவிந்த் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் பகிர்ந்திருக்கிறார்.
திரைத்துறையினர் பலரும் அபிஷன் ஜீவிந்துக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


