3 முறை தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் தற்கொலை.. விஷம் அருந்தியதால் பெரும் அதிர்ச்சி...
மூன்று முறை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் யாதவ் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக டெல்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
எஃப்55 பிரிவில் போட்டியிட்டு வந்த நீரஜ் யாதவ், 2018 ஜகார்த்தா ஆசிய பாரா விளையாட்டில் ஈட்டி எறிதலிலும், 2023 ஹாங்க்ஜோ போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டெறிதல் ஆகிய இரண்டிலும் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தவர். 7 வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட இவர், சக்கரநாற்காலி டென்னிஸ் விளையாட்டின் மூலம் தனது விளையாட்டுப் பயணத்தைத் தொடங்கி, பின் பாரா தடகளத்தில் உலக அளவில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.
சமீபத்தில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக விதிக்கப்பட்ட தடையின் காரணமாக, நடப்பு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா இச்சம்பவத்தை உறுதிசெய்து, விளையாட்டில் ஏற்ற இறக்கங்களைச் சகித்துக் கொள்ளாமல் ஒரு சிறந்த வீரன் இதுபோன்ற தீவிர முடிவை எடுத்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


