இந்தியா vs நியூசிலாந்து 3-வது டி20: 199 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா அதிரடி சேஸிங்..
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி 89* ரன்களும் (52 பந்துகள்), ஃபின் ஆலன் 40 ரன்களும், பிவோன் ஜேக்கப்ஸ் 39* ரன்களும் சேர்த்தனர். இந்திய தரப்பில் நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 199 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூரியவன்ஷி ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்து ரன் வேட்டையை தொடங்கியுள்ளனர். அபிஷேக் 11 பந்தூகளில் 39 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 8 பந்துகளில் 19 ரன்களும் அடித்து விளையாடி வருகின்றனர்..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


