2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் எப்போது? போட்டி அட்டவணை எப்போது ரிலீஸ்?
ஐபிஎல் 2027 தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15-ஆம் தேதிக்குள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணிகள் இறுதி செய்ய வேண்டும். மேலும், இந்த ஏலம் நடைபெறும்போது இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியும் பெங்களூருவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2026 சீசன் முடிந்தபிறகு, தற்போதைய ட்ரேடிங் விண்டோவில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளன. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது கேப்டன் ரிஷப் பண்டை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வழங்கி, அதற்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை வாங்கியுள்ளது. டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அனுப்பிவிட்டு லெக் ஸ்பின்னர் ஜீஷான் அன்சாரியை பெற்றுள்ளது.
அடுத்த சீசனுக்கான போட்டி அட்டவணை இன்னும் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்படவில்லை என்றாலும், மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டிசம்பர் ஏலமானது தற்போதைய சுழற்சியின் கடைசி மினி ஏலமாகும்; 2028 சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

