ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் விளையாட முடியாது.. பொல்லார்ட் கூறியதை உறுதி செய்த சிஎஸ்கே சி.இ.ஓ

 

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள வரவிருக்கும் SA20 லீக் தொடரில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் விளையாட முடியாது என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

 

இந்தத் தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.   சமீபத்தில் நடைபெற்ற SA20 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி கீரன் பொல்லார்ட்டை விலைக்கு எடுத்திருந்தது. 

 

இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் சார்ந்த அணிகளுக்காகவும் விளையாடி வரும் பொல்லார்ட், சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்காக விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார்.   

 

ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய அடையாளமாக திகழ்ந்த பொல்லார்ட், தனது பழைய அணி நிர்வாகத்துடனான பிணைப்பு காரணமாகவே எதிரணியான சூப்பர் கிங்ஸ் பிராஞ்சைசி அணிக்காக விளையாடுவதை தவிர்த்துள்ளார் எனக்கூறப்படுகிறது. 

 

பொல்லார்ட்டின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், குறிப்பாக எம்.ஐ மற்றும் சி.எஸ்.கே ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.