உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஃபாலோ ஆன ஆஸ்திரேலியா.. தெ.ஆ. அணி சாதனை..

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் வெறும் 99 ரன்களுக்கு சுருண்டது. 

 

ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்கா 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், கேப்டன் டெம்பா பவுமா 179 ரன்கள்  மற்றும் மார்கோ யான்சன் 85 ரன்கள் எடுத்த ஜோடி 132 ரன்கள் சேர்த்து அணியை மீட்டது. அதனைத் தொடர்ந்து பவுமா மற்றும் சைமன் ஹார்மர் (82) ஜோடி 183 ரன்கள் சேர்த்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 425/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

 

இதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியை ரபாடாவின் வேகமும், யான்சனின் 5 விக்கெட்டுகளும் பந்தாடின. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாட்டில் ஆஸ்திரேலியாவை ஃபாலோ-ஆன் செய்யச் சொன்ன முதல் அணி என்ற பெருமையை தென் ஆப்பிரிக்கா பெற்றது. 

 

இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் மாடிசனை விரைவில் இழந்தது. தற்போது வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவைப்படும் நிலையில் தென் ஆப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.