30 நாட்களுக்கு ரொனால்டோ சஸ்பெண்ட்.. போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு அதிரடி..
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு 30 நாட்கள் இடைநீக்க தடையும், 255 யூரோக்கள் அபராதமும் விதித்துள்ளது.
2026-27 ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றிய நேஷன்ஸ் லீக் தொடரில் போர்ச்சுகல் அணி விளையாடியபோதிலும், ரொனால்டோவுக்கு போட்டிகளில் போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நார்வே அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ மாற்று வீரர்கள் வரிசையிலேயே அமர வைக்கப்பட்டதாக அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், டென்மார்க் போட்டியில் அவர் சேர்க்கப்படமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு விளையாட வாய்ப்பளிப்பதாகக் கூறிய வாக்குறுதியை மீறிவிட்டதாகப் பயிற்சியாளர் ஜீசஸ் மீது அதிருப்தியடைந்த ரொனால்டோ, டென்மார்க் போட்டிக்கு முன்பாகவே பயிற்சி முகாமில் இருந்து வெளியேறினார். இருப்பினும், ரொனால்டோவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என ஜீசஸ் மறுத்தார்.
போட்டிக்கு முன்னதாகவே பயிற்சி முகாமை விட்டு வெளியேறிய ரொனால்டோ மீதான ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு இந்த 30 நாள் தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


