ஐஎஸ்எல் கால்பந்து: கேரள பிளாஸ்டர்ஸை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வடகிழக்கு யுனைடெட் அபார வெற்றி!

 

இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வடகிழக்கு யுனைடெட் எஃப்சி அணி அபார வெற்றி பெற்றது. 

 

இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், வடகிழக்கு அணியின் சார்பில் அலா எடின் அஜராய் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.

 

போட்டியின் 15-வது நிமிடத்திலேயே அஜராய் முதல் கோலை அடித்து வடகிழக்கு அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். தொடர்ந்து முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் ஆண்டோனியோ மொயானோ இரண்டாவது கோலை அடித்தார். இரண்டாம் பாதியில் 60-வது நிமிடத்தில் கேரள அணியின் யான்சானே ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

 

எனினும், 70-வது நிமிடத்தில் அஜராய் தனது இரண்டாவது கோலை பதிவு செய்ய, வடகிழக்கு அணி 3-1 என வலுவான நிலையை அடைந்தது. தொடர்ந்து 82-வது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த அறிமுக வீரர் அமான் சி.கே நான்காவது கோலை அடித்தார். இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் வடகிழக்கு யுனைடெட் எஃப்சி அணி அபார வெற்றி பெற்று 3 புள்ளிகளை கைப்பற்றியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.