மழையால் நின்று போன 5வது டி20 போட்டி போட்டி.. மே.இ.தீவு கேப்டனுக்கு தொடர் நாயகன் விருது..
பெங்களூரு எம். சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டு முடிவில்லை என அறிவிக்கப்பட்டது. இதன்படி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மழை காரணமாகப் போட்டி 9 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணியில் இஷான் கிஷன் (30) மற்றும் நமன் தீர் (24*) அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஸ்பிரிங்கர் மற்றும் கீமோ பால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மீண்டும் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை மேல்கொண்டு தொடர முடியாமல் கைவிடப்பட்டது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 261 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் தொடர்நாயகன் விருதை வென்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


