ஜோஸ் பட்லருக்கு தொடையில் அறுவை சிகிச்சை.. 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா?
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான ஜோஸ் பட்லர், வரவிருக்கும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது இவருக்கு இடது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக அண்மையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள அவர், நீண்ட ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதன் காரணமாக, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து அவர் விலகுகிறார்.
மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள SA20 தொடரிலும் இவரது பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவருக்கு ஒரு வருட ஒப்பந்தத்தை வழங்கி உள்ளது.
2027 உலகக் கோப்பைத் தொடரில் பட்லர் தொடர்ந்து இடம்பெறுவார் என்று இங்கிலாந்து அணியின் நிர்வாகப் இயக்குனர் ராப் கீ நம்பிக்கை தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள பட்லர், விரைவில் முழு உடல் தகுதியுடன் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


