குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..
குலசேகரம் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த வருடத்துக்கான தசரா திருவிழா கடந்த அக்டோபர் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் தசரா திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் மிகவும் பிரமாண்டமாக தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சிவன், ராஜா, குறத்தி, காளி போன்ற வேடமணிந்து, விரதம் இருந்து காணிக்கைகளை சேகரித்து தசரா நாளில் அந்த காணிக்கையை கோவிலில் செலுத்துவார்கள். முக்கியமாக விழா தொடங்கி 10ம் நாள் தசரா அன்று கடற்கரையில் மகிஷாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் பக்தர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்று..
இந்த தசரா திருவிழா கடந்த அக்டோபர் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற அக்டோபர் 20ஆம் தேதி தசரா திருவிழா அங்கு நடைபெறவிருக்கிறது. குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு 11.10. 2026 முதல் 21. 10.22606 வரை 100 ரூபாய் கட்டண விரைவு தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், பக்தர்கள் அனைவரும் பொது தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


