33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

 

 

டர்பனில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் நிக் மேடின்சன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பவிலியன் திரும்பியுள்ளனர்.

 

டிராவிஸ் ஹெட் 9 ரன்களில் வியான் முல்டர் பந்துவீச்சிலும், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்குத் திரும்பிய நிக் மேடின்சன் 33 பந்துகளைச் சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் மார்கோ யான்சன் பந்துவீச்சிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற பிறகு, இரு அணிகளும் சந்திக்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

 

தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷி புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் முதல் இரண்டு இடங்களில் இருப்பதால், 2027 இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தத் தொடரின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு, முதல் நாளிலேயே போட்டியை விறுவிறுப்பான கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.