பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!
பிருந்தாவனத்தில் உள்ள பிரபல ஆன்மீகத் துறவி பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்திற்கு வருகை தர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ரூ.5 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவலை கோலியின் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது.
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி சங்கர்ஷ் நியாஸ் தலைவர் தினேஷ் சர்மா (பல்ஹாரி மகாராஜ்) என்பவர், கோலியை ஆசிரமத்திற்கு வரவழைக்க ரூ.5 கோடி செலவிடப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், விராட் கோலியின் செய்தி தொடர்பாளர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், "தினேஷ் சர்மா கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு மாறானவை. விராட் கோலி ஆன்மீக குரு பிரேமானந்த் மகாராஜ் மீது கொண்டுள்ள தீவிர நம்பிக்கையினாலும் மரியாதையினாலும் மட்டுமே ஆசிரமத்திற்குச் செல்கிறார்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் 2023 ஜனவரி முதல் பலமுறை பிருந்தாவனம் சென்று பிரேமானந்த் மகாராஜைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


