புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

 

 

விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை வனப்பகுதியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு, நாளை  முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரை 4 நாட்களுக்குப் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

 

அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்கள் ஆன்மீக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்தவை என்பதால், இக்காலகட்டத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் செய்யப்பட்டுள்ளன.

 

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மேலும், மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைப்பாதை தற்காலிகமாக அடைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் செல்லும் பக்தர்கள் வனத்துறையின் கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் முழுமையாகப் பின்பற்றி, சுந்தர மகாலிங்க சுவாமியைத் தரிசித்து அருள் பெறலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.