வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்த இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற தமிழகத்தை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த அணியில் திறம்பட செயல்பட்டு வெற்றிக்கு வித்திட்ட தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரின் பங்களிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து, சர்வதேச அளவில் இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த வாஷிங்டன் சுந்தரின் சாதனையை பாராட்டி, தமிழக அரசின் சார்பில் அவருக்கு ரூ.75 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கும், அதில் இடம்பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வாஷிங்டன் சுந்தருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இவரது இந்த மகத்தான வெற்றி, விளையாட்டுத் துறையில் ஈடுபடும் ஏராளமான இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும். அவர் மேலும் பல சாதனைகளைப் படைத்து நாட்டிற்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

