மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது போட்டி.. பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் விலகல்.. மாற்று வீரர்கள் யார் யார்?

 

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக விலகியுள்ளார். குவாஹாத்தியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு இடது தொடை தசையில்  காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்திற்கு   திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அவருக்குப் பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடி வந்த கம்போஜ், உடனடியாக முல்லன்பூரில் உள்ள இந்திய அணியுடன் இணைக்கப்பட்டுள்ளார். கம்போஜ் இதுவரை இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் நமன் தீர் சேர்க்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக இவர் அணியில் இடம்பெற்றுள்ளார். 

 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக ரஞ்சி கோப்பை போட்டிகளில் பங்கேற்று பயிற்சி பெற வாஷிங்டன் சுந்தருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான நமன் தீர், சமீபத்தில் தனது ஒருநாள் அறிமுகப் போட்டியில் விளையாடிய நிலையில், விரைவில் டி20 அணியிலும் அறிமுகமாகவுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.