உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை.. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியின் நாள்..

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான போட்டி அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இத்தொடர் 2027 அக்டோபர் 2 முதல் நவம்பர் 21 வரை நடைபெறவுள்ளது.

 

இத்தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் சுற்றில் 12 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் தகுதிபெறும் ஒரு அணி இடம் பெற்றுள்ளன.

 

இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 7 அன்று கேப் டவுனில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து, உலகமே எதிர்பாருக்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் அக்டோபர் 10 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.

 

குரூப் சுற்றின் முடிவில் இரு குழுக்களிலிருந்தும் தலா 3 அணிகள் மற்றும் சிறந்த ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் சூப்பர் 7 சுற்றுக்கு முன்னேறும். அக்டோபர் 25 முதல் தொடங்கும் சூப்பர் 7 சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். முதல் அரையிறுதி நவம்பர் 17 அன்றும், இரண்டாவது அரையிறுதி நவம்பர் 18 அன்றும் நடைபெறுகின்றன. கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நவம்பர் 21 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.